புதன், 23 மே, 2018

​துப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்!? May 23, 2018

Image

துப்பாக்கிச்சூடு எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703லும், பயிற்சி கையேடு பிரிவு 123லும் குறிப்பிடப்பட்டுள்ளது.  முதலில் 
கும்பலாக கூடி வன்முறையில் ஈடுபடுவது சட்ட விரோதம் என போலீசார் அறிவுறுத்த வேண்டும் என்றும், கண்ணீர் புகைக்குண்டு, தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடித்தல் போன்றவற்றை போலீசார் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்ணீர் புகைக்குண்டு, தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடித்தல் பயன்படவில்லை என்றால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு முன் உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரிக்க வேண்டும் என்றும் காவல் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கூம்பு வடிவ ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி மூலம் குறிவைப்பது போராட்ட கும்பலை பயமுறுத்துவதற்காக இருக்க வேண்டும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் வானத்தை நோக்கி சுட வேண்டும் என்றும் காவல் நிலை ஆணையில் கூறப்பட்டுள்ளது.