வெள்ளி, 18 மே, 2018

பருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன? May 18, 2018

Image

பருவ வயது குழந்தைகள் தற்கொலை முயற்சி கடந்த 2008ம் ஆண்டு முதல் இரட்டிப்பாகி இருக்கிறது என சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட கணக்கெடுப்பில், 15 லிருந்து 17 வயதுடைய குழந்தைகள் அதிக அளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பள்ளி விடுமுறை காலங்களில் தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பள்ளி செல்லும் காலங்களில் தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது எனவும் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், பள்ளியில் கொடுக்கப்படும் மன அழுத்தமே பருவ வயது குழந்தைகளின் தற்கொலை முயற்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது என்ற முடிவிற்கு கணக்கெடுப்பாளர்கள் வந்துள்ளனர்.