வியாழன், 24 மே, 2018

காவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி மக்கள் அச்சம் : திருமாவளவன் May 24, 2018

Image

காவல்துறையினர் எந்த நேரத்தில் எதை செய்யபோகிறார்கள் என்ற பய உணர்வில் தூத்துக்குடி மக்கள் இருந்து வருவதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியளர்களை சந்தித்த அவர்,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க  2-வது முறையாக துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மக்கள் பீதியடைந்து உள்ளதாகவும், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என பய உணர்வில் உள்ளதாக திருமாவளவன் வேதனை தெரிவித்தார். 

தூத்துக்குடி மக்கள் பீதியோடு வாழ்ந்து வருகிறார்கள் .  காவல்துறையினர் எந்த நேரத்தில் எதை செய்ய போகிறார்கள் என்ற பயத்தில் இருக்கிறார்கள் 

நேற்றைய தினம் பல்லாயிரக்கணகக்கான மக்கள் திரண்டதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக சொன்னார்கள் ஆனால இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் நடத்திய போராட்டத்தில் அதிகமானோர்  திரளவில்லை ஆனால் இன்றும்.காவல்துறையினர் துப்பாக்கொ சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. 

மே 22 ம் தேதி கரைபடிந்த நாளாக  அமைந்துவிட்டது. மேலும் தூத்துக்குடி பகுதியில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். முதல்வர் உனடியாக தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். 
               
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காளிப்பாளரை மாற்றம் செய்தால் போதாது அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் விசாரணை குழு விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது என்வே உடனடியாக துப்பாக்கி சூடு சமபவம் குறித்து  சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்