அண்ணன் Xavier S John ன் பதிவு..
PJ சம்பந்தமாக.. அருமையான பதிவு..
PJ சம்பந்தமாக.. அருமையான பதிவு..
சகோ.பீஜே அவர்களின் சர்ச்சை பற்றிய பதிவு போடவில்லையென்றால் நான் முகநூலில் இருந்து என்ன பிரையோஜனம்...
சகோ.பீஜே அவர்கள் விஷயத்தில் இரு சாராரை காண முடிகிறது...
ஒருவர் அவருக்கு ஆதரவு தருபவர் மற்றவர் அவரை சாடுபவர்...
முதலாமவரில் சிலர் அவர் தவரிழைத்தாலும் கொள்கையே எங்களுக்கு தலைவன் என்கின்றனர்...
இரண்டாமவர்களில் இவரே யோக்கியன் இல்லாத போது இவரின் கொள்கை அனைத்தையும் தூக்கி போட வேண்டியதுதானே என்கின்றனர்...!
இதை நான் வேறு கோணத்தில் அனுகுவதோடல்லாமல் இதற்கான முற்றுப்புள்ளியாக ஒரு சிறு யோசனை கூறுகிறேன்... சரியெனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்...
பொதுவாகவே நம்மில் பலருக்கு ஒரு எண்ணம் உண்டு... அறிவுரை சொல்பவர் யோக்கியமில்லாத போது அவரின் அறிவுரையை மனம் ஏற்காது இது மனித இயல்பு...!
ஆனால் அறிவுள்ளவர்கள் சிந்திக்கக்கூடியவர்கள்,,, அறிவுரையோ யோசனையோ யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களே தவிர சொன்னவரை தனி நபர் ஆய்வுக்கு உட்படுத்தமாட்டார்கள்...!
இந்த உலகிலுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் குர்ஆனில் தீர்வு இருக்கும் போது இது ஒரு சாதாரண அற்ப விஷயம்...
இதற்கான தீர்வையும் குர்ஆன் ஹதீஸ் களிலிருந்தே பார்ப்போம்...
சரி கொஞ்சம் தெளிவாக சொல்கிறேன்,,,
நபிகளார் காலத்தில் ஷைத்தான் எதையோ திருட வந்து மாட்டிக்கொண்டதாகவும் அதை பிடித்து கட்டிப்போட்டிருந்தபோது அந்த ஷைத்தானாகப்பட்டது குர்ஆனின் ஒரு அத்தியாயத்தை (பெயர் ஞாபகமில்லை) ஓதிக்காண்பித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் ஹதீதில் படித்திருக்கிறேன்...!
நபிகளாரோ அவருடனிருந்தவர்களோ... நீயே ஒரு வழிகெடுக்கும் ஷைத்தான், நீ எங்களுக்கு ஓதிக்காட்டுகிறாயா என்று அந்த அத்தியாயத்தை தூக்கி எரிந்துவிட்டார்களா என்ன...?
இதன் மூலம் நாம் பெற்ற படிப்பினை...
ஒருவர் நல்லவரோ கெட்டவரோ அவர் கூறும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்...
அவர் பற்றிய ஆய்வு நமக்கு தேவையுமில்லை, அவரை சாடவோ சாபமிடவோ நமக்கு அதிகாரமில்லை.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் தீர்ப்பு நாள் என்று ஒன்று இருப்பதை நாம் மறந்துவிட்டோம் அல்லது நம்பிக்கை இழந்து விட்டோம் என்று பொருள்...
ஒரு வேளை அவரால் யாராவது நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருந்தால்...
வழக்கு தொடுத்து இந்த உலகில் தண்டனை பெற்றுத்தரலாம்...
மறுமையிலும் அவரை நீங்கள் மன்னிக்காமல் அங்கேயும் தண்டனை வாங்கித்தரலாம்...!
ஏனென்றால் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காதவரை படைத்தவனும் மன்னிக்கமாட்டானென்பது உங்களுக்கு தெரியும்...!
அது போக அவருடைய கொள்கையையும் தூக்கி எரியவேண்டுமென்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்...
அவர் கூறிய கொள்கைகள் எதுவும் அவரின் சொந்த கருத்துக்களில்லை...
அவைகளனைத்தும் குர்ஆன் ஹதீதிலிருந்து திரட்டப்பட்டு பாமரனுக்கும் எளிதில் புரியக்கூடிய விதத்தில் எடுத்துரைத்தார்...
அதை தூக்கி எரிய வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.!!
மேலும்... சகோ.பீஜே போன்றவர்களுக்காகவே பல வசனங்களை படைத்தவன் அன்றே குர்ஆனில் கூறாமளில்லை...
2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
இதைப்படிக்கும் வேளையில் என்னையும் சகோ.பீஜே அவர்களுக்கு முட்டுக்கொடுப்பவர்களின் ஒருவன் என்று முடிவு செய்துவிட வேண்டாம்...
நான் ததஜ என்ற இயக்கத்திலும் இருந்ததில்லை வேறு எந்த இயக்கத்திலும் இருக்கவுமில்லை...!
மாறாக 2006 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்திட்ட ஐந்து வருடம் வின் டிவியில் சகோ.பீஜே அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன்...
அப்போது நான் நாத்திகன் உங்கள் பாஷையில் காஃபிராக இருந்த சமயம்...
முதல் இரண்டாண்டுகள் இவருடைய நிகழ்ச்சியைப்பார்த்து ஏளனம் செய்திருக்கிறேன் மனதுக்குள் சிரித்திருக்கிறேன்...
அதன் பிறகு அவரின் குர்ஆன் ஹதீஸின் எளிமையான ஆதாரங்கள் என்னை சிறிதளவு சிந்திக்கவைத்தது...
அவ்வளவுதான் சகோ.பீஜே விற்கும் எனக்குமான தொடர்பு... அன்றும் இன்றும் என்றுமே சரி அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை...
ஏனென்றால் அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய சொந்தக்கருத்துக்களில்லை என்பது எனது ஆறாவது அறிவிற்கு தெரியும்...
இவர் மட்டுமல்ல அதன் பின் ஜாஹிர் நாயக், அஹ்மத் தீதாத் போன்றோர்களையும் நான் தலைவராக ஏற்றுக்கொள்ள வில்லை...
அவர்களின் கருத்தும் அவர்களின் சொந்த கருத்தில்லை என்பதை நானறிந்திருந்தேன்...!!
உஹது போர்களத்தில் எதிரிகள் நபிகளாரின் மண்டையை உடைத்த வேளையில் நபிகளார் அவர்களைப்பார்த்து கூறினார்...
இறைதூதரை இரத்தம் பார்த்த சமூகம் எவ்வாறு சொர்கம் செல்லும் என்றவுடன் அவரின் இந்த வார்த்தையைக்கண்டித்து...
நபியே இதில் உமக்கு எவ்வித அதிகாரமுமில்லை அவர்கள் செய்த நன்மையின் காரணமாக சொர்கம் செல்வதும். அவர்கள் செய்த தீமையின் காரணமாக நரகம் செல்வதும் எம்மிடமே உள்ளது...
என்று படைத்தவன் இறக்கிய ஒரு வசனத்தை பார்க்கிறோம்... இது சும்மா டைம்பாஸுக்காகன்னு நினைச்சிங்களா...?
இதுவும் படிப்பினை அதாவது ரஸூல் (ஸல்) அவர்களுக்கே ஒருவரை சாபமிட அதிகாரமில்லை என்கிற போது நீங்களும் நானும் எம்மாத்திரம்...!!
மனிதனை பலகீனமானவனாக படைத்திருக்கிறோம்...
என்று கூறுகிறான் அப்படியிருக்க அந்த பலகீனத்தால் தவறு செய்த ஒருவரை சாபமிட்டு நீங்கள் பாவத்தை சேர்த்துக்கொள்ளப்போகிறீர்களா அல்லது படைத்தவன் பார்த்துக்கொள்ளட்டும் நமக்கு அதில் அதிகாரமில்லையென்று மௌனமாகப்போகிறீர்களா...?
முடிவு உள்களுடையது...!!!
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
{திருக்குர்ஆன் 49:12}