வியாழன், 17 மே, 2018

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! May 16, 2018

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் வேக மாறுபாடு நிலவும் சூழலில், கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு பகுதியில், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில்  இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல் தென் தமிழகத்தில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 36
டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.