விண்வெளி ஆய்வு மையத்திற்கு எரிபொருளை நிரப்புவதற்காக அமெரிக்காவின் வார்லஸ் தீவிலிருந்து ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அதில், வீரர்கள் பயன்படுத்தும் வகையில், ஆடைகள், உணவு உள்ளிட்ட பொருட்களும், விஞ்ஞானிகளுக்கு தேவையான உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட், வரும் 24 ஆம் தேதி விண்வெளி ஓடத்தை அடையும் என கூறப்படுகிறது. பிறகு, அங்கிருந்து, ஜூலை மாத இறுதிக்குள் மீண்டும் பூமியை வந்தடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.