வெள்ளி, 18 மே, 2018

கூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி! May 12, 2018

Image

கூகுள் நிறுவனம் கூகுள் டூப்லெக்ஸ் (GOOGLE DUPLEX) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இணைய உலகில் முக்கியமான நிறுவனமாக விளங்கும் கூகுள் தனது வாடிக்கையாளர்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக கூகுள் டூப்லெக்ஸ் என்ற வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. 

அது வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

இந்த செயலி செயற்கை நுண்ணறிவு உடையதென்றும், உரையாடலின் நுணுக்கங்கள் அந்த செயலிக்குத் தெரியும் என்கிறார் சுந்தர் பிச்சை. பல ஆண்டுகள் முயற்சி செய்து இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியதாகக் கூறுகிறார் சுந்தர் பிச்சை. மேலும் இதனை மெருகூட்டும் முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.