வெள்ளி, 18 மே, 2018

உதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2018

Image

உதகை தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கிவைத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற விழாவில், ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான குந்தா நீரேற்று புனல் மின் திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் முடிவடைந்த 7 திட்டப் பணிகளைத் துவக்கிவைத்த எடப்பாடி பழனிசாமி, 5 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், 11 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான கோரிக்கைகள் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வரைவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.

விடுபட்டுள்ள ஒரு சில கோரிக்கைகளும், சேர்க்கப்பட்டு தமிழகத்திற்கு நன்மை தரும் முழுமையான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று வழங்கும் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.