செவ்வாய், 29 மே, 2018

கன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29, 2018

கன்னியாகுமரியில் தொடரும் மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

கீரிப்பாறை, காளிகேசம், பால்குளம், வாளையத்து வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் மழையால், ரப்பர் மரங்களிலிருந்து பால் வெட்டி எடுக்கும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழை காலங்களில் மாற்றுப்பணியை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Image