வடமாநிலங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அகமதாபாத் மாநகராட்சி வெயிலை சமாளிக்க புது யுக்தியை கையாண்டு வருகிறது.
வீடுகளின் மேற்கூரையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதால் ஓரளவிற்கு வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியும். இதனால் குளிர்சாதன வசதி செய்ய முடியாத ஏழை மக்களின் வீடுகளில் அகமதாபாத் நகராட்சி சார்பில் இலவசமாக வெள்ளை வர்ணம் அடித்து தரப்படுகிறது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் சுமார் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.