வியாழன், 17 மே, 2018

கர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற்பு வரை May 17, 2018

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவின் எடியூரப்பாவை பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து, எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். 

அரசியல் சதுரங்க ஆட்டம் கர்நாடகாவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் முடிவு முதல் தற்போது வரையிலான முக்கிய நிகழ்வுகள் இதோ :

15.05.2018

➤ பாஜக - 104, காங்கிரஸ் - 78 , மதசார்பற்ற ஜனதா தளம் - 37 இடங்களில் வெற்றி 

➤ ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை  பாஜக பெறவில்லை

➤ கர்நாடகாவில் ஆட்சி அமைக்க JDS கட்சிக்கு ஆதரவு என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வரா அறிவிப்பு

➤ கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா

➤ குமாரசாமி, சித்தராமைய்யா, குலாம் நபி ஆசாத் ஆகியோரும் கர்நாடக ஆளுநரை சந்தித்தனர்

➤ காங்கிரஸ் ஆதரவுடன் JDS ஆட்சி அமைக்கும் என சித்தராமைய்யா, குமாரசாமி கூட்டாக அறிவித்தனர்

➤ கர்நாடகவில் பாஜகவை வெற்றியடைய செய்த மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி 


16.05.2018


➤ காங்கிரஸ்- JDS கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களை எங்கள் பக்கம் இழுப்பதற்காக கண்காணித்து வருகிறோம் -  பாஜக  தலைவர் ஈஸ்வரப்பா

➤ பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை - மஜத குமாரசாமி அறிவிப்பு

➤ காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் வெற்றி பெற்ற 12 எம்.எல்.ஏக்கள் பங்கேற்காததால் சர்ச்சை

➤ JDS கட்சி நடத்திய கூட்டத்தில் 2 எம்.எல்.ஏக்கள் பங்கேற்காததால் பரபரப்பு

➤ பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக சட்டமன்ற பாஜக தலைவராக எடியூரப்பா தேர்வு

➤  “எங்கள் எம்எல்ஏக்களை கைப்பற்ற நினைத்தால் பாஜகவின் எம்எல்ஏக்களை பதிலுக்கு கைப்பற்றுவோம்” - JDS குமாரசாமி

➤  “JDS எம்.எல்.ஏக்களிடம் 100 கோடி ரூபாய் வரை பாஜக பேரம் பேசுகிறது” - குமாரசாமி

➤  “100 கோடி ரூபாய்க்கு பேரம் என குமாரசாமி பேசுவது கற்பனை கதை” - பிரகாஷ் ஜவடேகர் , பாஜக

➤  “ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா” - குலாம்நபி ஆசாத்

➤  எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா

➤  பதவியேற்புக்கு தடைவிதிக்க வேண்டும் என  காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  நள்ளிரவில் மனு தாக்கல் 


17.05.2018


➤  கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடைவிதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

➤  காங்கிரஸ் தொடுத்த வழக்கில் நாளை மீண்டும் விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

➤  ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எடியூரப்பா வழங்கிய கடிதத்தை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

➤  கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா

➤  கர்நாடகா சட்டமன்றம் முன்பாக காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்தத் தலைவர்கள் தர்ணா போராட்டம்

➤  ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி என முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா அறிவிப்பு