
கியூபாவில் பயணிகள் விமானம் விபத்துள்ளானதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.
ஹவானா விமான நிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் புறப்பட்ட அந்த விமானம், சில விநாடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கியது.
உடனடியாக தீயணைப்பு துறையினரும், மீட்புக் குழுவினரும் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்களில் 100 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.