புதன், 30 மே, 2018

​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம் May 30, 2018

Image

கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், மங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழைக்கு இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகாவில் இடைவிடாமல் கொட்டிய மழையால்,  மங்களூரு நகரில் உள்ள கொட்டாரசவுக்கி, தொக்கோடு, எக்கூர், லால்பாக், வாமஞ்சூர், கிருஷ்ணாபுரா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் மழையால்,  உடுப்பி, குந்தாப்புரா, கார்கலா, பைந்தூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பள்ளி மாணவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கடலோர கர்நாடக மாவட்டங்களில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Posts: