திங்கள், 21 மே, 2018

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21, 2018

Image

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில், இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

AfrAsia வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனிநபர்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும், அவர்களின் சொத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டும் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுகளின் பொருளாதார பலம் கணக்கில் கொள்ளப்படவில்லை, என்றும் 
குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பிரிட்டன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 5வது இடத்திலும், இந்தியா 6வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 7வது இடமும், கனடா 8வது இடமும், பிரான்ஸ் 9வது இடமும், இத்தாலி 10வது இடமும் பிடித்துள்ளன. 

டாப் 10 பணக்கார நாடுகள்

1) அமெரிக்கா
2) சீனா
3) ஜப்பான்
4) பிரிட்டன்
5) ஜெர்மனி 
6) இந்தியா
7) ஆஸ்திரேலியா
8) கனடா
9) பிரான்ஸ்
10) இத்தாலி