சனி, 12 மே, 2018

முட்டையை விட அதிக புரத சத்து உள்ள உணவுகள்! May 12, 2018

Image

முட்டை சிறியதாக இருந்தாலும், அதில் புரத சத்து மிக அதிக அளவில் இருக்கிறது. ஆனாலும், முட்டையை சில காரணங்களுக்காக வெறுப்பவர்களும் உண்டு. முட்டைக்கு நிகராக, அதிக அளவு புரத சத்து உள்ள உணவு வகைகளின் பட்டியல் உங்களுக்காக..

1.கோழி கறி:

முட்டை பிடிக்காதவர்கள், தாராளமாக கோழிக்கறி சாப்பிடலாம். அரை கப் சமைக்கப்பட்ட கோழிக்கறியில், 22 கிராம் புரத சத்து இருக்கிறது. சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அதிக புரத சத்து இருப்பதால், கோழிக்கறியை பல வகைகளாக சமைத்து உண்ணலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2.பன்னீர்:

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரில் புரத சத்து மிகுதியாக இருக்கிறது. 100 கிராம் பன்னீர் சாப்பிட்டால், நமக்கு 14 கிராம் புரத சத்து கிடைக்கும். பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட விலை மலிவாக பன்னீர் இருப்பதால், தினசரி உணவில் பன்னீரை சேர்த்துக்கொள்வது பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

3. வெண்ணெய்:

பட்டியலில் அடுத்ததாக இடம்பெற்றிருப்பது வெண்ணெய். 100 கிராம் வெண்ணெயில் 6.5 கிராம் புரத சத்து இருக்கிறது. வெண்ணெயில் புரத சத்து அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்களும் மிகுதியாக இருப்பதால் வயதான காலங்களில் கூட எலும்புகளை பலமாக வைத்திருக்க உதவுகிறது. 

4. பீன்ஸ்:

பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பீன்ஸ் வகைகளில் அதிகமான அளவில் புரத சத்து இருக்கிறது. அரை கப் வெகவைத்த பீன்ஸ்-ல் 7.3 கிராம் புரத சத்து இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மூளையில் இருக்கும் செல்களை பாதுகாக்கும் ஆண்டிஆக்சிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. 
வேகவைத்த பின்னரும் வைட்டமின் சி சத்து குறையாமல் இருப்பது, இதுபோன்ற பீன்ஸ் வகைகளின் முக்கிய சிறப்பு.

5.ப்ராக்கோளி: 

மற்ற காய்களை விட அதிக சத்து நிறைந்தது ப்ராக்கோளி. வைட்டமின் கே, சி, நார் சத்து மற்றும் புரத சத்து அதிக அளவில் இருப்பதால், பிராக்கோளியை உணவில் அதிக அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கப் ப்ராக்கோளியில் 3 கிராம் புரத சத்து இருக்கிறது. 

Related Posts: