
தமிழக பாட திட்டங்கள் சிபிஎஸ்இக்கு நிகராக மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு பெற்றோர்-மாணவர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தலைவர் வி.சி.சி. நாகராஜன், தமிழக அரசு 1,6, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டத்தை சிபிஎஸ்சிக்கு நிகராக மாற்றம் செய்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார்.
அதேநேரம் பாட திட்டங்கள் மாற்றம் காரணமாக 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.