சனி, 5 மே, 2018

நீட் தேர்வு: அன்பு பாலம் உதவி மையங்களில் பணியாற்ற தன்னார்வலர்களுக்கு அழைப்பு! May 4, 2018

Image
வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு அங்குள்ள தமிழ் சங்கத்துடன் இணைந்து நியூஸ் 7 அன்பு பாலம் மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், பட்டனந்திட்டா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தங்குமிடத்திலிருந்து தேர்வு எழுதும் மையத்திற்கு மாணவர்கள் சென்று வர அன்பு பாலம் மூலம் போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

உதவி தேவைப்படுவோர் 044-40777777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில்  நீட் தேர்வு மையங்கள் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் அமைத்துள்ள உதவி மையங்களில் பணியாற்ற தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். 

நீட் தேர்வுக்கான உதவி மையத்தில் பணியாற்ற விரும்பும் தன்னார்வலர்கள் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் எந்த பகுதிகளிலிருந்தும் வரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எர்ணாகுளம் செல்ல விரும்பும் தன்னார்வலர்கள் 77085-75277, 94435-08001 என்ற அலைபேசி எண்களையும்,  

திருவனந்தபுரம் செல்ல விரும்பும் தன்னார்வலர்கள்  77086-29577, 96003-66849 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Related Posts: