செவ்வாய், 8 மே, 2018

பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கை முட்டாள்தனமானது - மன்மோகன் சிங் May 7, 2018

Image

பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கை முட்டாள்தனமானது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற முட்டாள்தனமாக நடவடிக்கையால், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும், சிறு, குறு தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், அண்மையில் பெரும்பாலான நகரங்களில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டு, பொருளாதார பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தியதாகவும் மன்மோகன்சிங் சுட்டிக்காட்டினார். 

மோடியின் தவறான பொருளாதார கொள்கையால், வங்கித்துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்திய மத்திய அரசு, சாமானிய மக்களை தண்டித்துவருவதாகவும் குற்றம்சாட்டினார். 

Related Posts: