வியாழன், 30 ஏப்ரல், 2020
லாக் டவுனில் சிக்கியவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம் - உள்துறை அமைச்சகம் அனுமதி
By Muckanamalaipatti 2:12 PM
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில நிபந்தனைகளுடன் அந்தந்த இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.
தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
புதன்கிழமை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டார்.
இதுகுறித்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், “சிக்கித் தவிக்கும் இத்தகைய குழுக்கள் ஊர்செல்வதற்கான போக்குவரத்திற்காக பேருந்துகள் மட்டும் பயன்படுத்தப்படும். இந்த வாகனங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும். இருக்கைகளில் பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
லாக் டவுனில் சொந்த ஊர் செல்வதற்கான உத்தரவில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது, “லாக் டவுன் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கான நிபந்தனைகள் எவை எவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி , அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதற்கான திட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பான நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அத்தகைய சிக்கித் தவிக்கும் நபர்களைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் நிலையான நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். சிக்கித் தவிக்கும் நபர்களை தங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குள் அதிகாரிகள் பதிவு செய்வார்கள்.
சிக்கித் தவிக்கும் நபர்களின் குழு, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் இடையில் செல்ல விரும்பினால், அனுப்பும் மற்றும் பெறும் மாநிலங்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து சாலை வழியான இயக்கத்திற்கு பரஸ்பரம் ஒப்புதல் அளித்துக்கொள்ளலாம்.
சொந்த இடங்களுக்குச் செல்லும் நபர்கள் பரிசோதனையிடப்பட்டு, கொரோனா தொற்று நோய் அறிகுறியற்றவர்களாக இருப்பவர்கள் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.
பேருந்து போக்குவரத்துப் பாதையில் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அத்தகைய நபர்களைப் பெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் செல்ல அனுமதிக்கும்.
சொந்த இடங்கள் செல்லும் நபர்கள் இலக்கை அடைந்ததும், அத்தகைய நபர்கள் உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்படுவார்கள். மேலும், வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். மதிப்பீட்டில் நபர்களை நிறுவன தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் அவர்கள் அவ்வப்போது சுகாதாரப் பரிசோதனைகளுடன் கண்காணிக்கப்படுவார்கள்'” என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோடியை டுவிட்டரில் பின்தொடர்வதை நிறுத்திய வெள்ளை மாளிகை: காரணம் என்ன?
By Muckanamalaipatti 2:10 PM
அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாடு பயணங்களின் போது, சில காலங்களுக்கு மட்டும் வரவேற்கும் நாடுகளின் சில அதிகாரிகளின் ட்விட்டர் கணக்கை ‘ பாலோ’ செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தயாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் ஆகியோரின் ட்விட்டர் கணக்கை வெள்ளை மாளிகை பாலோ செய்தது. வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையை இந்திய-அமெரிக்கா நட்பின் புது பரிணாம் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில், இந்த ஆறு ட்விட்டர் கணக்கையும் வெள்ளை மாளிகை ‘அன் பாலோ’ செய்தது.
“பொதுவாக அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளை மட்டும் தான் ட்விட்டரில் வெள்ளை மாளிகை பாலோ செய்யும். கூடுதலாக, அதிபரின் வெளிநாடு பயணங்களின் போது, சில ட்வீட்டை மறுட்வீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்த நாட்டின் அதிகாரிகளை பாலோ செய்யும் ,” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த நிர்வாக அதிகாரி கூறினார்.
ஜனாதிபதி கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்குகளை வெள்ளை மாளிகை ‘அன்iபாலோ’ செய்த நிகழ்வு இந்தியாவில் சமூக ஊடகங்களில் பேசும் பொருளாகி வந்தது.
இந்த சம்பவம் அறிந்து திகைத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
‘எங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெள்ளை மாளிகை’ அன்பாலோ செய்ததை அறிந்து நான் திகைக்கிறேன். இதை வெளிவிவகார அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன்,”என்று அவர் புதன்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
புதன்கிழமை நிலவரப்படி, வெள்ளை மாளிகை ட்விட்டர் கணக்கை 22 மில்லியன் மக்கள் பாலோ செய்கினரன் .
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் கைப்பிடி, முதல் பெண்மணி, துணை ஜனாதிபதி, இரண்டாம் பெண்மணி, புதிய பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் முன்னாள் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஸ்டீபனி கிரிஷாம் உள்ளிட்ட 13 கணக்குகளை வெள்ளை மாளிகை காலம் காலமாக பின்பற்றுகிறது.
கிம் உயிரோடு தான் இருக்கிறார்! ஆனால்? - முன்னாள் தூதரக அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
By Muckanamalaipatti 2:06 PM
இந்த கொரோனா காலங்களில் அதிகம் தேடப்படும் நபராக இருக்கிறார் வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன். அவர் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் பலரும் அவருக்கு என்ன ஆனது என்று சிந்திக்க துவங்கியுள்ளனர். சிலர் அவர் இறந்துவிட்டதாகவும், அவருக்கு இருதய கோளாறு இருப்பதாகவும், சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் பல்வேறு வதந்திகளை கூறி வருகின்றனர். ஆனால் அவருடைய தற்போதைய உண்மையான நிலை யாருக்குமே தெரியவில்லை.
இந்நிலையில் தென்கொரிய நாடு, வட கொரிய அதிபர் மிகவும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று கூறியது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவல் மேலும் பதட்டமடைய வைக்கிறது. வடகொரியாவில் இருந்து வெளியேறி, தென்கொரியாவில் வசித்து வரும் வடகொரிய முன்னாள் தூதரக அதிகாரி “கிம் ஜாங் உன், உயிருடன் தான் இருக்கிறார். ஆனால் அவரால் எழுந்து நடமாட முடியாத நிலையில் தான் இருக்கிறார். எழுந்து அமரவோ, நடக்கவோ இயலாது” என்றும் அதிர்ச்சியான தகவலை அவர் கூறியுள்ளார்.
வடகொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் ஜாங் உன் தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக, ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவர் பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. அன்றைய தினத்தில் இருந்து தான் இது போன்ற சர்ச்சைகள் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
credit indianexpress.com
பொள்ளாச்சியை போல இன்னொரு ஆபாசக் குப்பை: குண்டர் சட்டத்தில் தள்ளப்பட்ட காசி
By Muckanamalaipatti 2:05 PM
பொள்ளாச்சி சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் ரீதியாக சூறையாடியாது இல்லாமல், அவர்களிடம் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்த நபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி.. வயது 26.. சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார்.. படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார்.. ஆனால் இவர் படிக்கும்போதே பெண்களிடம் நெருங்கி பழகி உள்ளார்.
பெண்களை மாயவலையில் வீழ்த்தியது எப்படி?
மாலை கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவாராம்.. ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டு வந்துள்ளார். பெண்ணியம் குறித்த கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிடம், இந்த கருத்துக்களை பார்த்து பல பெண்கள் காசியிடம் விழுந்துவிட்டனர்.. அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையும் எடுத்து வைத்துள்ளார். நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து வைத்து கொண்டு, நாளடைவில் பணம் கேட்டு அப்பெண்களை மிரட்டி வந்துள்ளார். இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்..
பணம் பறிப்பு
பிறகு தன்னுடைய அம்மாவுக்கு புற்றுநோய், பணம் மருந்து வாங்க வேண்டும் என்று கேட்டு லட்சக்கணக்கில் ஏமாற்றி உள்ளார். தற்போது காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் இன்னொரு மோசடியும் வெளியே வந்துள்ளது… பெண்களை ஏமாற்றியே காசி 4 அடுக்கு மாடி கொண்ட வீட்டை கட்டி உள்ளார்.. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் தரைதளம், முதல் தளம் மட்டும் கட்டிக்கொள்ளலாம் என அனுமதி தரப்பட்டிருந்தது.. ஆனால் காசியோ, வீட்டின் முன்பகுதியையும் ஆக்கிரமித்து, தரைதளம், முதல்மாடி, 2-வது, 3-வது, 4-வது மாடி வரை கட்டி உள்ளார். இப்போது இதை இடிக்க நாகர்கோயில் மாநகராட்சி முடிவு செய்து அதற்கான நோட்டீஸையும் காசி வீட்டில் ஒட்டி உள்ளது.
புகார் : முதல்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் காசி குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்யவும்தான் விஷயம் வெளியே வந்தது.
போலீஸ் விசாரணை
புகாரை தொடர்ந்து, கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. இந்த விஷயத்தில் காசிக்கு 4 நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.. அவர்களையும் போலுசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
அரசியல் தொடர்பு
அப்போதுதான் காசிக்கு சில அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கமும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.. “காசியால் ஏமாந்த பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களது ரகசியம் காக்கப்படும்” என மாவட்ட காவல்துறை அறிவிக்கவும் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவாக புகார் தந்து கொண்டுள்ளனர்.. இதையடுத்து 25 மதிக்கத்தக்க பெண் ஒரு என்ஜினியர் ஒருவர் புகார் தந்தார். இப்போது இன்னொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.. இந்த பெண்ணையும் காசி ஏமாற்றியுள்ளார்.
குண்டர் சட்டத்தில் கைது : இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணையை நடத்தி உண்மையை வெளிக்கொணரும் பொருட்டு, காசியை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்தை போல,இந்த சம்பவமும் நீர்த்துப்போகாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே, இதுபோன்ற நபர்கள் குற்றம் செய்ய தயங்குவார்கள் என்பது பாமர மக்களின் எண்ணமாக உள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் தொடர்பான வீடியோ சர்ச்சை - போட்டோகிராபர் மீது எப்ஐஆர் பதிவு
By Muckanamalaipatti 2:03 PM
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தொடர்பான எடிட் பண்ணப்பட்ட வீடியோவை, சமூகவலைதளங்களில் பரப்பியது தொடர்பாக, பிரீலாஞ்சர் போட்டோகிராபர் ஸ்ரீராம் என்பவர் மீது சென்னை போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் கொரோனா பாதிப்பின் அன்றாட நிகழ்வுகளை, சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் சில நாட்கள் வழங்கி வந்தார். அவர் ஒருநாள் பேசிய வீடியோவில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திலேயே கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்திருந்தார். மற்றொரு நாள் அளித்த பேட்டியில், மார்ச் 9ம் தேதியே, முதல் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு நாளைய வீடியோக்களையும் ஒன்று சேர்த்து எடிட் பண்ணி, சமூகவலைதளங்களில் சிலர் உலவவிட்டிருந்தனர். இதுபெரும் வைரலாகி வந்தது.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் மார்ச் மாதம் என்பதற்கு பதிலாக பிப்ரவரி என்று தவறுதலாக தெரிவித்துவிட்டதாக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோவை, பிரீலாஞ்சர் போட்டோகிராபராக சென்னையில் பணியாற்றி வரும் ஸ்ரீராம் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சுமந்த் ஸ்ரீராமன் உள்ளிட்டோர் இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசாருக்கு புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, ஸ்ரீராமை எச்சரித்திருந்த சைபர் கிரைம் போலீசார், அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு பணித்திருந்தது. அவரும் அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டார். பின் மீண்டும் அவர் அந்த வீடியோவை பதிவு செய்திருந்தது தெரியவந்ததால், சைபர் கிரைம் போலீசார், ஸ்ரீராம் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீராம் விளக்கம் : இது எனது சொந்த வீடியோ அல்ல என்றும், சமூகவலைதளங்களில் வந்த விடியோவையே தான் பகிர்ந்ததாகவும், இதில் எனது தவறு எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் விளக்கம் : இது எனது சொந்த வீடியோ அல்ல என்றும், சமூகவலைதளங்களில் வந்த விடியோவையே தான் பகிர்ந்ததாகவும், இதில் எனது தவறு எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 3-வது அல்லது 4-வது லாக்டவுன் வந்தால், பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும்: ரகுராம் ராஜன்
By Muckanamalaipatti 1:52 PM
இந்தியாவில் 3-வது அல்லது 4-வது லாக்டவுன் வந்தால், பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் ஆலோசித்தார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், கொரோனா பிரச்சினையால் வேலையிழந்து வறுமையில் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க, உடனடியாக 65ஆயிரம் கோடி ரூபாய் தேவை என கூறினார்.
A conversation with Dr Raghuram Rajan, former RBI Governor, on dealing with the #Covid19 crisis. https://www.pscp.tv/w/cXjsjzFEWUVYR3drTmFSamd8MXpxSlZsbGdldk1LQiMhvc7kpzCPAR7mmUcTha9p5eBB1LCBOJCIr8K8IVUk …
இதைப் பற்றி 9,947 பேர் பேசுகிறார்கள்
லாக்டவுனை தொடர்ந்து நீட்டிக்காமல், பொருளாதாரத்தை படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான வழியைத் தேட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். லாக்டவுனை முடிக்க மத்திய அரசு தீர்மானித்தவுடன், முதலில் மக்களின் உயிரைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மக்களையும், பொருளாதாரத்தையும் காக்க, மரபுகளையும், விதிமுறைகளையும் மீறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் நாள்தோறும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுவதாகவும், அதை 5 லட்சம் என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்வு!
By Muckanamalaipatti 1:50 PM
https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-newsslider/30/4/2020/corona-prevalence-doubled-single-week-chennai
கொரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் தொடர்ந்து பச்சை மண்டலமாகவே நீடித்து வரும் கிருஷ்ணகிரியில் நேற்றும் புதிதாக தொற்று எதுவும் ஏற்படவில்லை. எனினும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்ததால், கிருஷ்ணகிரி நகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் புதிய தொற்று ஏற்படவில்லை. புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 104 பேரில், 94 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 768 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் புதிதாக 2 பேருக்கு நேற்று கொரொனா பாதிப்பு உறுதியானது. 2 வயதுக்குட்பட்ட குழந்தை உள்பட 4 குழந்தைகளுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் தொடர்ந்து பச்சை மண்டலமாகவே நீடித்து வரும் கிருஷ்ணகிரியில் நேற்றும் புதிதாக தொற்று எதுவும் ஏற்படவில்லை. எனினும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்ததால், கிருஷ்ணகிரி நகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டை செப்டம்பரில் தொடங்கலாம்! - யூசிஜி
By Muckanamalaipatti 1:48 PM
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த ஒரு சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் வரும் வரும் கல்வியாண்டு தொடர்பாகவும், எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்க யூசிஜி முன்னாள் உறுப்பினர் குஹத் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் சில அறிவிப்புகளை புதிதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்து.
அதில், நிகழ் கல்வியாண்டில் இறுதி செமஸ்டர் தேர்வை ஜூலை 1ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை நடத்தலாம் என்றும், ஜூலை 16ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை இடை நிலை செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஒதுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களுக்கான கல்வி ஆண்டை செப்டம்பர் 1ம் தேதியிலிருந்தும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்டு 1ம் தேதியிலிந்து வகுப்புகளை தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆய்வு மாணவர்களுக்கு கூடுதலாக 6 மாதங்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் Projects, Viva, dissertation போன்ற உள்மதிப்பீட்டு தேர்வுகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கைலைக்கழகங்கள் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இயங்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளை பொறுத்தவரைக்கும், முதலாம் மற்றும் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி உள்மதிப்பீடு அடிப்படையில் மதிப் பெண்களை பகிர்ந்து கிரேடு வழங்கவும், அதில் முடிந்த பருவத் தேர்வில் இருந்து 50% கணக்கிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இறுதி பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழங்களும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளையும், மதிப்பீட்டு தேர்வையும் skype அல்லது வேறு சமூக செயலியை பயன்படுத்தி நடத்தி முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மொத்தத்தில், இருகின்ற குறிபிட்ட கால இடைவெளிக்குள் மாணவர்களுக்கான தேர்வு பணிகளை முடிக்மாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்!
By Muckanamalaipatti 1:47 PM
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோய் குணமடைந்து இரு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழங்கள் கொடுத்து கை தட்டி வழியனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களும் கொடுத்து அனுப்பினார்கள். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு நான்கு வாரங்களுக்கு முன் 16 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் கடந்த வாரம் தேங்காய் பட்டினம், நாகர்கோவில் உள்ளிட்ட வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து நேற்று 88 வயது மூதாட்டி அவரது மகன் இரு குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்கள் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து நபர்கள் முழுவதுமாக குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். ஏற்கெனவே 30-க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், திருச்சியை சேர்ந்த 3 பேர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை மருத்துவர்கள் கை தட்டி வழி அனுப்பி வைத்தனர். தற்போது 14 பேர் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியின் கோயம்பேடு’ - ஆசாத்பூர் காய்கறிசந்தையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
By Muckanamalaipatti 1:45 PM
credit ns7.tv
சென்னையில் உள்ள கோயம்பேடு போலவே டெல்லியில் ஆசாத்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையானது ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையாக சொல்லப்படுகிறது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, தலைநகர் டெல்லியிலும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதனிடையே டெல்லி ஆசாத்பூர் காய்கறி சந்தையில் இதுவரை 11 வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 4 வியாபாரிகளுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆசாத்பூர் காய்கறி சந்தையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் இந்த காய்கறி சந்தையில் வியாபாரம் பார்த்து வந்த 57 வயதுடைய கமிஷன் ஏஜெண்ட் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கிய நிலையில் இச்சந்தையில் உள்ள பல கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு கிருமிநாசினி தெளித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதேவேளையில் போதிய காய்கறிகள், பழங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கான விநியோகம் தடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காய்கறி சந்தை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதன், 29 ஏப்ரல், 2020
சாதி மூலம் எவரையும் இனி அடையாளம் காணக்கூடாது - ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு
By Muckanamalaipatti 4:50 PM
ஒரு நபரின் சாதி எந்தவொரு நீதி மற்றும் நிர்வாக விஷயத்திலும் குறிப்பிடக்கூடாது என்றும், இது “அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய்ப்பூர் பெஞ்ச் விசாரித்த 2018 வழக்கை குறிப்பிடும்போது நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பிற நபர்களின் சாதி இந்த நீதிமன்றத்தின் பதிவகத்தின் அதிகாரிகள் / அதிகாரிகள் மற்றும் நீதித்துறை மற்றும் நிர்வாக விவகாரங்களில் துணை நீதிமன்றங்கள் / சிறப்பு நீதிமன்றங்கள் / தீர்ப்பாயங்களின் தலைமை அலுவலர்களால் இணைக்கப்பட்டுள்ளது, இது அரசியலமைப்பிற்கு எதிரானது. என்று நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு கிரிமினல் வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் ஷர்மா அடங்கிய பெஞ்ச இதனை விசித்திர வழக்கு என்று குறிப்பிட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், ஐந்து நாட்கள் வரை மனுதாரர் பிஷன் (24) சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. காரணம், உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த மனுதாரரின் ஜாதியும், போலீஸ் கைது மெமோவில் குறிப்பிடப்பட்டிருந்த ஜாதியும் ஒன்றாக இல்லை என்ற காரணத்தினால் என வழக்கறிஞர் கிரிராஜ் பி ஷர்மா குறிப்பிட்ட பிறகு, நீதிபதி இது “விசித்திரமானது” என்று குறிப்பிட்டார்.
“மனுதாரருக்கு ஜூன் 29, 2018 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் அச்சுப் பிழை காரணமாக, மனுதாரரின் ஜாதி மெவ் என்று பதிவாகி இருந்தது. ஆனால், அவர ஜாதவ் எனும் ஜாதியை சேர்ந்தவர்,” என்று சர்மா கூறினார். இந்த மாறுபட்ட காரணத்தால் மட்டுமே, ஜாமீன் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் மனுதாரர் கடந்த ஐந்து நாட்களாக சிறையில் இருக்கிறார்,” என்றும் அவர் கூறினார்.
நீதிபதி ஷர்மா நீதிமன்றம் ஒரு நபரை தனது சாதியால் அடையாளம் காணக்கூடாது, ஆனால் அவரது பெற்றோர் வழி மரபு மூலம் அடையாளம் காணப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது.
“ஒரு குற்றவாளியை கைது செய்யும் போது காவல்துறை கைது குறிப்பில் சாதி பற்றி குறிப்பிடுகிறது மற்றும் சாதி ஒரு நபரை அடையாளம் காண்பதற்கான ஒரு காரணியாக குறிப்பிடப்படுகிறது, இது மிகவும் வெறுக்கத்தக்கது மற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு முரணானது. ஒரு நபரை அவரது சாதியால் அடையாளம் காண முடியாது, ஆனால் அவரது பெற்றோர் வழி மரபு மூலம் அடையாளம் காணப்பட வேண்டும், ”என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
“சாதி இல்லாத சமுதாயத்தை நோக்கி அரசு பாடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருப்பினும், அதற்கு பதிலாக மாநிலத்தின் செயல்பாட்டாளர்கள் சாதியைக் குறிப்பிட வலியுறுத்துகின்றனர், ”என்று நீதிபதி சர்மா கூறியிருந்தார். எதிர்காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாதி ஜாமீன் விண்ணப்பங்களில் குறிப்பிடப்படக்கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.
“கைது செய்யப்பட்ட மெமோவில் ஒரு நபரின் சாதியை காவல்துறையினர் குறிப்பிடக்கூடாது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் ஒரு நபரை சாதி மூலம் அடையாளம் காண்பது சிஆர்பிசியின் கீழ் வழங்கப்படவில்லை அல்லது அரசியலமைப்பின் கீழ் எந்தவொரு சட்டத்தின் கீழும் வழங்கப்படவில்லை” என்று நீதிபதி சர்மா விலக்கு அளிக்கும்போது கூறினார்.
உத்தரவின் நகல் மாநில அரசு மற்றும் டிஜிபி அனுப்பப்பட்டது. திங்களன்று உத்தரவு “குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட எந்தவொரு நபரின் சாதியும் எந்தவொரு நீதித்துறை அல்லது நிர்வாக விஷயத்திலும் இணைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கட்டளையிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
சார்ஜ் போட்டுக் கொண்டு வீடியோ கால்: மொபைல் வெடித்து இளம் பெண் காயம்
By Muckanamalaipatti 4:47 PM
சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனில் வீடியோ கால் பேசிய போது, ஃபோன் சூடாகி வெடித்து இளம்பெண் காயமடைந்திருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சு****ர். இவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் *** தி வயது 18. கொரோனா பாதிப்பு அனைவரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் ஆர்த்தி.
பலரும் செய்வதைப் போன்று, செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அவர் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென பலத்த சப்தத்துடன் செல்போன் வெடிக்க, உடைந்த பாகங்கள் ஆர்த்தியின் கண் மற்றும் காதுக்குள் சென்றன. இதனால், வலியில் அலறித்துடித்த ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்தது ஃபோன் என்றாலும், சத்தம் கார் டயர் வெடித்ததைப் போன்று இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
By Muckanamalaipatti 4:43 PM
இந்தியாவின் இரண்டாவது பொது முடக்க நிலை வரும் மே 3ம் தேதியுடன் முடிவடையும் தருவாயில், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 7,695 பேர் குணமாகியுள்ளனர். நாட்டில் 31,332 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. tulladhநாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,400 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிளாஸ்மா சிகிச்சை முறையும் பரிசோதனைக்குரிய சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும், இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தலாமா என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதன்
பிளாஸ்மா சிகிச்சை செயல் திறனை மதிப்பீடு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின் அறிவியல்பூர்வ ஆதாரம் கிடைக்கும் வரையில், ஆராய்ச்சி மற்றும் சோதனை அடிப்படையிலான தேவைகளைத் தவிர மற்ற வகையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. உண்மையில், பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது
credit indian express.com
பச்சை மண்டலங்களில் தொழில் துவங்க தமிழக அரசு அனுமதி!
By Muckanamalaipatti 1:42 PM
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வயிலாக ஆலோசனையில் ஈடுப்பட்டார்.
அப்போது, அனைத்து மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், முழு ஊரடங்கு பலனளித்ததா என்பதும் பற்றியும் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கொரோனா தடுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் பாராட்டிய முதல்வர், கடந்த 2 நாட்களாக 30 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், கிராமப் புறங்களில் கொரோனா பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அல்லாத பச்சை நிறப் பகுதியில் படிப்படியாக தொழில் துவங்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்லாம் என்றும், குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ரேஷன், மளிகை, காய்கறி கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமி வலயுறத்தியுள்ளார். மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் முறையாக வழங்குவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்த மண்ணெண்ணெய் வழங்க டோக்கன் வழங்கியும் முறைப்படுத்த வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. விவசாயம் சார்ந்த தொழில்கள் பாதிக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 100 நாள் வேலை திட்டம் நிபந்தைனைகளுடன் நடைபெறலாம் என்றும், அதில் பணிபுரிபவர்கள் கட்டயாம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 55 வயதுக்கு உட்பட்டவர்கள் பணிக்கு வர வேண்டாம் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
credit ns7.tv