வியாழன், 23 ஏப்ரல், 2020

10,000 'டூ' 20,000 கொரோனா பாதிப்புகள் - இந்தியா எடுத்துக் கொண்ட கால நேரம் 8 நாட்கள்

மகாராஷ்டிரா செவ்வாயன்று மேலும் 552 கொரோனா வைரஸ் பாதிப்புகளை சேர்த்து, இந்தியாவை மொத்தமாக 20,000 பாதிப்புகளை நோக்கி அழைத்துச் சென்றது. அதே நாள் நாடு முழுவதுமுள்ள உள்ள மாநிலங்களில் இருந்து குறைந்தது 52 இறப்புகள் பதிவாகியுள்ளன, வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் நாடு கண்ட மிக அதிகமான இறப்புகள் இதுவாகும்.
செவ்வாய்க்கிழமை இரவு, நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 19,975 ஐ எட்டியுள்ளது. 5218 பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
நாட்டில் பதிவான புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் மகாராஷ்டிரா பங்களித்துள்ளது. அதுவும் தொடர்ந்து, மூன்றாவது நாளாக.
ஞாயிற்றுக்கிழமையும், மாநிலத்தில் 552 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. திங்களன்று 466 புதிய பாதிப்புகள் வெளிவந்துள்ளன.

செவ்வாயன்று நாடு முழுவதும் இருந்து மொத்தம் 1510 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து, ஒரே நாளில் வைரஸ் அதிகம் பரவத் தொடங்கிய  இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஞாயிற்றுக்கிழமை 1577 புதிய பாதிப்புகள் காணப்பட்டது. செவ்வாயன்று அதிகரிப்புக்கு மற்ற முக்கிய பங்களிப்பாளர்களாக குஜராத் 239 புதிய பாதிப்புகளுடனும், ராஜஸ்தான் 159 பாதிப்புகளுடனும், மற்றும் உத்தரப்பிரதேசம் 153 புதிய பாதிப்புகளுடனும் உள்ளன.
இதில், குஜராத் டெல்லியை முந்தியது. நாட்டில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் இங்கு தான் உள்ளன. குஜராத்தில் இப்போது 2178 பாதிப்புகள் உள்ளன. அதில் செவ்வாயன்று மட்டும் 75 புதிய பாதிப்புகள். டெல்லியில் 2156 பாதிப்புகள் உள்ளன.
கேரளாவில் கூட செவ்வாய்க்கிழமை கணிசமான எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதன் 19 பாதிப்புகள் தான் கடந்த 20 நாட்களில் மாநிலத்தில் அதிகமாக பதிவான எண்ணிக்கையாகும். கேரளாவில் இப்போது 426 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
கடந்த சில நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் சேர்க்கப்பட்ட போதிலும், லாக் டவுன் விளைவாக இந்தியாவில் நோய் பரவுவது கணிசமாகக் குறைந்துள்ளது. 10,000 வழக்குகளில் இருந்து 20,000 வழக்குகள் வரை பயணம் செய்ய இந்தியா எட்டு நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. லாக்டவுன் தாக்கம் தெளிவாகத் தெரிவதற்கு முன்பு, நாடு பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சியைக் கண்டது.
மார்ச் மாத தொடக்கத்தில் மூன்று கொரோனா பாதிப்பாக இருந்த எண்ணிக்கை, 100 பாதிப்புகளை எட்ட 2 வாரங்கள் எடுத்துக் கொண்டது. 1000 வழக்குகளை எட்ட மேலும் இரண்டு வாரங்கள் ஆனது. மேலும், 10,000 எண்ணிக்கையைத் தொடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு சற்று அதிகமாக நாட்கள் ஆனது. அந்த விகிதத்தில், பார்த்தோமெனில், நாடு மாத இறுதிக்குள் ஒரு லட்சம் பாதிப்புகளை எட்டும். ஆனால் லாக்டவுன் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த மாத இறுதியில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 25,000 முதல் 30,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாதிப்புகளில் பெரும் பகுதியினர் ஒரு சில பகுதியில் இருந்தே அதிகம் பதிவாகின்றன. செவ்வாயன்று நடந்த புதிய பாதிப்புகளில் 75 சதவீதம் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் பதிவானவை தான். தமிழ்நாடு, டெல்லி, மத்தியப் பிரதேசம், மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் பங்களிப்புகள் சேர்க்கப்பட்டால், இது புதிய பாதிப்புகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
அதிகபட்ச இறப்புகள் நிகழ்ந்த மாநிலங்களும் இவைதான். மகாராஷ்டிராவில் பத்தொன்பது இறப்புகள் நிகழ்ந்தன. குஜராத்தில் குறைந்தது 13 பேரும், மத்திய பிரதேசத்தில் எட்டு பேரும், உத்தரபிரதேசத்தில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.