புதன், 29 ஏப்ரல், 2020

பச்சை மண்டலங்களில் தொழில் துவங்க தமிழக அரசு அனுமதி!


Image
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வயிலாக ஆலோசனையில் ஈடுப்பட்டார். 
அப்போது, அனைத்து மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், முழு ஊரடங்கு பலனளித்ததா என்பதும் பற்றியும் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
மேலும், கொரோனா தடுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் பாராட்டிய முதல்வர், கடந்த 2 நாட்களாக 30 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், கிராமப் புறங்களில் கொரோனா பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.  
கொரோனா பாதிப்பு அல்லாத பச்சை நிறப் பகுதியில் படிப்படியாக தொழில் துவங்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்லாம் என்றும், குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 
ரேஷன், மளிகை, காய்கறி கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமி வலயுறத்தியுள்ளார். மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் முறையாக வழங்குவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்த மண்ணெண்ணெய் வழங்க டோக்கன் வழங்கியும் முறைப்படுத்த வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். 
வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. விவசாயம் சார்ந்த தொழில்கள் பாதிக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 100 நாள் வேலை திட்டம் நிபந்தைனைகளுடன் நடைபெறலாம் என்றும், அதில் பணிபுரிபவர்கள் கட்டயாம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 55 வயதுக்கு உட்பட்டவர்கள் பணிக்கு வர வேண்டாம் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். 
credit ns7.tv