புதன், 29 ஏப்ரல், 2020

சார்ஜ் போட்டுக் கொண்டு வீடியோ கால்: மொபைல் வெடித்து இளம் பெண் காயம்


சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனில் வீடியோ கால் பேசிய போது, ஃபோன் சூடாகி வெடித்து இளம்பெண் காயமடைந்திருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சு****ர். இவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் *** தி வயது 18. கொரோனா பாதிப்பு அனைவரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில்,  நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் ஆர்த்தி.
பலரும் செய்வதைப் போன்று, செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அவர் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென பலத்த சப்தத்துடன் செல்போன் வெடிக்க, உடைந்த பாகங்கள் ஆர்த்தியின் கண் மற்றும் காதுக்குள் சென்றன. இதனால், வலியில் அலறித்துடித்த ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்தது ஃபோன் என்றாலும், சத்தம் கார் டயர் வெடித்ததைப் போன்று இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts: