credit ns7.tv
கொரோனா பிளாஸ்மா சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை வழங்க தயாராக உள்ளதாக கோவையில் கொரோனோ பாதிப்பில் இருந்து குணமடைந்தவர் தெரிவித்துள்ளார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கோவையை சேர்ந்த அவர், நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், கொரோனோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 18 நாட்களில் மருந்து, உணவு ஆகியவற்றை சிறந்த முறையில் மருத்துவமனை நிர்வாகம் வழங்கி கவனித்து கொண்டதாக தெரிவித்தார்.
சளி பிடிக்காமல் இருக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும், மருத்துவர்கள் மருந்து கொடுத்து சிகிச்சை அளித்ததாகவும், கொரோனோ அறிகுறி உள்ளதா என கண்டறியும் ஸ்வேப் டெஸ்ட் மற்றும் நெஞ்சில் சளி இருக்கிறதா என கண்டறிய எக்ஸ்ரே ஆகியவற்றை ஒருமுறைக்கு இருமுறை எடுத்து பரிசோதனை செய்த பிறகே, பூரண குணமடைந்ததாக கூறி வீட்டுக்கு அனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.