ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
ஊரடங்கு காரணாமாக 12 கோடி பேர் வேலை இழந்திருப்பதாக கூறிய அவர், பொருளாதார நடவடிக்கைகள் தேக்க நிலையில் இருப்பதால் வேலையின்மை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார். இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 7 ஆயிரத்து 500 ரூபாயை வழங்க வேண்டியது அவசியம் எனவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.
credit : ns7.tv