வாரணாசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை திரும்பிய இரண்டு திருவள்ளூர் பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இந்த இருவரும் தற்போது சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த இரண்டு பெண்களும் வாரணாசியில் இருந்து திருவள்ளூர் திரும்பிய 127 பேர் கொண்ட குழுவில் அங்கம் வகித்தனர். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் பி.பாலாஜி கூறுகையில், “பெரம்பலூரைச் சேர்ந்த 59 வயதான ஒரு பெண்ணும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 59 வயதான இன்னொரு பெண்ணும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அலகாபாத், காசி மற்றும் கயா ஆகிய இடங்களுக்கு மார்ச் 15 முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படும் வரை யாத்திரை மேற்கொண்டனர்” என்றார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 24 அன்று நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருவள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புனித யாத்திரை மேற்கொண்ட அந்தப் பெண்கள், தற்போது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படாமல், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, தி இந்து பத்திரிகையின் அறிக்கையில், சுமார் 127 பேர் சென்ற அந்த பயணத்தில், பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள் என்றும், அவர்கள் வாரணாசியில் இருந்து சாலை வழியாக திரும்பி திருவள்ளூர் மாவட்டத்தை அடைந்தனர் எனவும், அனைத்து பயணிகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, COVID-19 க்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன, என்றும் கூறப்பட்டிருந்தது.
உத்தரபிரதேசத்தில் சிக்கித் தவித்த அனைத்து யாத்ரீகர்களும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டவுடன், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு நிர்வாகத்தை வலியுறுத்தினர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், அவர்களை சாலை வழியாக பயணிக்க அனுமதித்தது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
நேற்றைய தரவுகளின்படி, தமிழகத்தில் COVID-19 க்கு மேலும் 43 பேர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த மொத்த எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் இரண்டு பேர் இறந்தனர். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 17 ஆகவும் உயர்ந்துள்ளது. இரண்டு புதிய கேஸ்களோடு, திருவள்ளூரில் மொத்த எண்ணிக்கை 48 ஆக உயர்ந்திருக்கிறது.
credit indian express.com