திங்கள், 27 ஏப்ரல், 2020

கொரோனாவை கண்டறியும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் - ராகுல் காந்தி

Image
கொரோனாவை கண்டறியும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனையை  அதிகப்படுத்துவதே, இந்த பிரச்னைக்கு முக்கிய தீர்வாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏற்ப கருவிகள் உள்ள போதிலும், நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதிக பரிசோதனைகளை மேற்கொள்வதில் உள்ள தடைகளைப் போக்க பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்றும், விரைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
credit ns7.tv