அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாடு பயணங்களின் போது, சில காலங்களுக்கு மட்டும் வரவேற்கும் நாடுகளின் சில அதிகாரிகளின் ட்விட்டர் கணக்கை ‘ பாலோ’ செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தயாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் ஆகியோரின் ட்விட்டர் கணக்கை வெள்ளை மாளிகை பாலோ செய்தது. வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையை இந்திய-அமெரிக்கா நட்பின் புது பரிணாம் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில், இந்த ஆறு ட்விட்டர் கணக்கையும் வெள்ளை மாளிகை ‘அன் பாலோ’ செய்தது.
“பொதுவாக அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளை மட்டும் தான் ட்விட்டரில் வெள்ளை மாளிகை பாலோ செய்யும். கூடுதலாக, அதிபரின் வெளிநாடு பயணங்களின் போது, சில ட்வீட்டை மறுட்வீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்த நாட்டின் அதிகாரிகளை பாலோ செய்யும் ,” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த நிர்வாக அதிகாரி கூறினார்.
ஜனாதிபதி கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்குகளை வெள்ளை மாளிகை ‘அன்iபாலோ’ செய்த நிகழ்வு இந்தியாவில் சமூக ஊடகங்களில் பேசும் பொருளாகி வந்தது.
இந்த சம்பவம் அறிந்து திகைத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
‘எங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெள்ளை மாளிகை’ அன்பாலோ செய்ததை அறிந்து நான் திகைக்கிறேன். இதை வெளிவிவகார அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன்,”என்று அவர் புதன்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
புதன்கிழமை நிலவரப்படி, வெள்ளை மாளிகை ட்விட்டர் கணக்கை 22 மில்லியன் மக்கள் பாலோ செய்கினரன் .
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் கைப்பிடி, முதல் பெண்மணி, துணை ஜனாதிபதி, இரண்டாம் பெண்மணி, புதிய பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் முன்னாள் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஸ்டீபனி கிரிஷாம் உள்ளிட்ட 13 கணக்குகளை வெள்ளை மாளிகை காலம் காலமாக பின்பற்றுகிறது.