வியாழன், 30 ஏப்ரல், 2020

சென்னையில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்வு!

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-newsslider/30/4/2020/corona-prevalence-doubled-single-week-chennai
Image
சென்னையில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.  
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் புதிய தொற்று ஏற்படவில்லை.  புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 104 பேரில், 94 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 768 ஆக உயர்ந்துள்ளது.  

செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  விழுப்புரத்தில் புதிதாக 2 பேருக்கு நேற்று கொரொனா பாதிப்பு உறுதியானது. 2 வயதுக்குட்பட்ட குழந்தை உள்பட 4 குழந்தைகளுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் தொடர்ந்து பச்சை மண்டலமாகவே நீடித்து வரும் கிருஷ்ணகிரியில் நேற்றும் புதிதாக தொற்று எதுவும் ஏற்படவில்லை. எனினும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்ததால், கிருஷ்ணகிரி நகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.