வெப்பம் அதிகரிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் வலுவிழக்கும் வகையில் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அறிவியல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனரகத்தின் செயல் தலைவர் வில்லியம் பிரையன், கொரோனா வைரஸ் தொடர்பாக கூறுகையில் உட்புற மற்றும் வெப்பம் குறைந்த நிலையில் கொரோனா வைரஸின் செயல்பாடு இயல்பாக இருக்கிறதென்றும், அதே வேளையில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் குறையும் நேரங்களில் கொரோனா வலுவிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் நேரடி சூரிய ஒளியில் வைரஸ் விரைவாக மரணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் வெப்ப மண்டல நாடுகளான சிங்கப்பூரில் கூட கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுவது இந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது.
கோடை காலத்தில் கொரோனாவின் தாக்கம் வலுவிழக்கும் என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்து தொடர்பாக எச்சரிக்கையுடன், கவனமாக பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வில்லியம் பிரையன் கூறுகையில், வெளிச்சமில்லாத இடத்தில் ஸ்டீல் போன்ற பரப்புகளின் மேல் கொரோனா வைரஸின் பாதியளவு வலிமை குறைய 18 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது, சற்று கூடுதலான வெப்பத்தின் போது இது 6 மணி நேரங்களாக குறைகிறது.
அதிகமான வெப்பத்தின் போது இது இரண்டு நிமிடங்களாக குறைகிறது என வில்லியம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது
credit ns7.tv