வியாழன், 30 ஏப்ரல், 2020

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்!

Image
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோய் குணமடைந்து  இரு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழங்கள் கொடுத்து கை தட்டி வழியனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களும் கொடுத்து அனுப்பினார்கள். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு நான்கு வாரங்களுக்கு முன் 16 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் கடந்த வாரம் தேங்காய் பட்டினம், நாகர்கோவில் உள்ளிட்ட வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து நேற்று 88 வயது மூதாட்டி அவரது மகன் இரு குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்கள் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து நபர்கள் முழுவதுமாக குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். ஏற்கெனவே 30-க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், திருச்சியை சேர்ந்த 3 பேர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை மருத்துவர்கள் கை தட்டி வழி அனுப்பி வைத்தனர். தற்போது 14 பேர் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.