சனி, 25 ஏப்ரல், 2020

முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி?

மக்கள் தொகை பெருக்கம் அதிகமுள்ள நகர்ப்புறங்களில் கொரோனா நோய் பரவல் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் வல்லுநர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக பரவி கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும் ஏப்ரல் 26 முதல் 29 வரை 4  நாட்களும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரை 3 நாட்களும் முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி?

➤மருத்துவமனைகள்
➤மருந்தகங்கள் 
➤மருத்துவ பரிசோதனை மையங்கள்
➤ஆம்புலன்ஸ்
➤அமரர் ஊர்திகள்
➤மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி
➤சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
➤காவல்துறை
➤வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,
➤மின்சாரம்
➤ஆவின் 
➤நடமாடும் கடைகள்
➤ஏடிஎம் இயந்திரங்கள்
➤ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவு
➤அம்மா உணவகங்கள் இவைகள் அனைத்து செயல்படும்.

இது தவிர உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும் என்றும், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோருக்கும் அனுமதி அளித்துள்ளது. ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படலாம் என்றும் ஏழைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலரின் அனுமதி பெற்று இயங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. கோயம்பேடு போன்ற காய்கறி சந்தைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட பிற அரசு அலுவலகங்கள் செயல்படாது என்றும்  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளது. பிற தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை.இந்த காலகட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் முழு ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv