வியாழன், 30 ஏப்ரல், 2020

வரும் கல்வியாண்டை செப்டம்பரில் தொடங்கலாம்! - யூசிஜி


Image
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த ஒரு சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் வரும் வரும் கல்வியாண்டு தொடர்பாகவும், எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்க யூசிஜி முன்னாள் உறுப்பினர்  குஹத் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் சில அறிவிப்புகளை புதிதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்து. 
அதில், நிகழ் கல்வியாண்டில் இறுதி செமஸ்டர் தேர்வை ஜூலை 1ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை நடத்தலாம் என்றும், ஜூலை 16ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை இடை நிலை செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஒதுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 
புதிய மாணவர்களுக்கான கல்வி ஆண்டை செப்டம்பர் 1ம் தேதியிலிருந்தும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்டு 1ம் தேதியிலிந்து வகுப்புகளை தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆய்வு மாணவர்களுக்கு கூடுதலாக 6 மாதங்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் Projects, Viva, dissertation போன்ற உள்மதிப்பீட்டு தேர்வுகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பல்கைலைக்கழகங்கள் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இயங்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளை பொறுத்தவரைக்கும், முதலாம் மற்றும் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி உள்மதிப்பீடு அடிப்படையில் மதிப் பெண்களை பகிர்ந்து கிரேடு வழங்கவும், அதில் முடிந்த பருவத் தேர்வில் இருந்து 50% கணக்கிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இறுதி பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
அனைத்து பல்கலைக்கழங்களும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளையும், மதிப்பீட்டு தேர்வையும் skype அல்லது வேறு சமூக செயலியை பயன்படுத்தி நடத்தி முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மொத்தத்தில், இருகின்ற குறிபிட்ட கால இடைவெளிக்குள் மாணவர்களுக்கான தேர்வு பணிகளை முடிக்மாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.