புதன், 29 ஏப்ரல், 2020

மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

இந்தியாவின்  இரண்டாவது பொது முடக்க நிலை வரும் மே 3ம் தேதியுடன் முடிவடையும் தருவாயில், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை  1,000 ஐத் தாண்டியுள்ளது.  தற்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 7,695 பேர் குணமாகியுள்ளனர்.  நாட்டில் 31,332 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. tulladhநாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,400 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிளாஸ்மா சிகிச்சை முறையும் பரிசோதனைக்குரிய சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும், இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தலாமா என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதன்
பிளாஸ்மா சிகிச்சை செயல் திறனை மதிப்பீடு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின் அறிவியல்பூர்வ ஆதாரம் கிடைக்கும் வரையில், ஆராய்ச்சி மற்றும் சோதனை அடிப்படையிலான தேவைகளைத் தவிர மற்ற வகையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. உண்மையில், பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது
credit indian express.com