கொரோனா அறிகுறியை கண்டறியும் ரேபிட் கிட் பரிசோதனை தமிழகத்தில் தொடங்கியது.
சென்னை, சேலம், கோவையில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் ரேபிட் கிட் பரிசோதனையை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. பரிசோதனைக்கு உட்படுபவரின் ரத்த மாதிரி, ரேபிட் கருவியில் வைக்கப்படுகிறது.
சில நிமிடங்களில், ரேபிட் கருவியில் ஒன்று அல்லது இரண்டு கோடுகள் உருவாகிறது. ஒரு கோடு வந்தால் நெகட்டிவ் என்றும், இரண்டு கோடுகள் வந்தால் பாசிடிவ் என்றும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டு கோடுகளுடன் பாசிடிவ் என முடிவு வருபவர்கள், அடுத்தகட்ட பரிசோதனையான பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ரேபிட் கிட் பரிசோதனை அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv