கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. 40 நாட்கள் ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வர உள்ளது. பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் அரசு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறது.
மக்களின் தேவைகளை உணர்ந்து ரேசன் பொருட்கள், காய்கறிகள், அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து தருகிறது. புதுவையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ஏற்கனவே ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 3.44 லட்சம் ரேசன் கார்ட்கள் வைத்திருக்கும் நபர்களின் வங்கிக் கணக்கில் இந்த பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ரேசன் கார்டுகளுக்கு ரூ. 1000 மட்டும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களும் தற்போது ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா முடிவுக்கு வரும் வரையில் அம்மா உணவகங்களில் இலவசமாக மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
credit indianexpress.com