தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உயர்ந்து காணப்பட்டது. இந்த சூழலில் வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக பெரம்பலூரில் 62 மி.மீ மழை பதிவானது. உள் தமிழகம், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிக வீசக்கூடும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
credit ns7.tv