ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

மே 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா?

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 496ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 990பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 49பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 824ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம்பேர், எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை மே 16ம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையே மத்திய அரசிடம் முன்வைத்துள்ளன. மகாராஷ்டிராவில், அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மும்பை மற்றும் புனேவில் மட்டும், ஊரடங்கை நீட்டிக்கலாமா என மாநில அரசு ஆலோசித்து வருகிறது.  தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளன. அதேநேரம், ஊரடங்கை மே 7ம் தேதி வரை நீட்டித்து தெலங்கானா மாநிலம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. 
credit ns7.tv