ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்த மக்கள்!

credit ns7.tv
Image
தமிழகத்தில் சென்னை, கோவை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டவுள்ளதை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் கடைகளில் வீதிகளில் திரண்டனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை , கோவை , மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் வரும் 29 ஆம் தேதி வரையும், திருப்பூர் சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் 28 ஆம் தேதி வரையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை அடுத்து நான்கு நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்காது என்பதால் இன்று ஏராளமான மக்கள் கடைத்தெருக்களில் குவிந்தனர். 

இதனால் சென்னையில் கோயம்பேடு சந்தையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவதால் காற்கறிகளை விற்பனை செய்ய ஏராளமான வியாபரிகள் இன்று சந்தையில் கடையிட்டிருந்தனர். மேலும் இன்று ஒரு நாள் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்பதால் கடைகளை இன்று மட்டும் 3 மணி வரை திறந்திருக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியிருந்தது. 

சென்னையில் கோயம்பேடு மட்டுமின்றி தியாகராய நகர், பல்லாவரம் , தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்கறிக் கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டதால் மக்கள் தாங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். எனினும் பல்வேறு பகுதிகளில மக்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.