ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

நாளை முதல் சார்பதிவாளர் அலுவலக பணிகள் தொடக்கம்!

Image
தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள், நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பதிவுத்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

சார் பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் துணைப்பதிவு தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பதிவுக்கு வரும் பொதுமக்களை கைகளை கழுவிய பின்னர் அலுவலகத்திற்கு நுழையுமாறு அறிவுறுத்தும்படி கூறப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
credit ns7.tv

Related Posts: