செவ்வாய், 21 ஏப்ரல், 2020

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!

Image
குடியரசுத்தலைவர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள  குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள மற்றவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊழியர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடுமட்டுமில்லாமல், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,601 ஆக உயர்ந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் 1,336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
credit ns7.tv