ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

இந்தியாவில் 8 மாநிலங்களில் 1,000-க்கு மேல் கொரோனா பாதிப்பு!

Image
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,000 தாண்டிய நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 49பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80% பேர், எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,628 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 323 பேர் உயிரிழந்துள்ளனர். 1076 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கு பின்னர், குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,071 ஆகவும், 133 பேரும் மடிந்துள்ளனர். 282 பேர் வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 2,625 பேரும், ராஜஸ்தானில் 2,141 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,945, தமிழகத்தில் 1,821 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து 8 மாநிலங்களில் தீவிரமாக உள்ளது.

credit ns7.tv