10ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த சில நாட்களாக குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது அரசு வெளியிடும் அறிக்கை மூலம் அறிய முடிவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவதாகவும் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
10ம் வகுப்பு பொதுதேர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தமிழகத்தில் பாதுகாப்பான நிலை திரும்பிய பிறகு பொதுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.ஆட்சியாளர்கள் தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.