தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகளவாக இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் 17 பேர்
உயிரிழப்பு:
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகளவாக இன்று 17 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 528 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை 17,527 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 15,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 33,229 பேரில், 20,575 பேர் ஆண்கள், 12,637 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 6,07,952 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 14,982 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உச்சத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பு:
சென்னையில் 1,149 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:
தமிழகத்தில் இன்று அதிகளவாக சென்னையில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. செங்கல்பட்டில் 134, காஞ்சிபுரத்தில் 18, திருவள்ளூரில் 57 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு அந்த மாவட்டத்தில் 1386 ஆக உயர்ந்துள்ளது. மேலும், செங்கல்பட்டில் இன்று 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 1,988 ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் மாத கொரோனா பாதிப்பு நிலவரம்:
ஜூன் 1 - 23,495
ஜூன் 2 - 24,586
ஜூன் 3 - 25,872
ஜூன் 4 - 27,256
ஜூன் 5 - 28,694
ஜூன் 6 - 30,152
ஜூன் 7 - 31,667
ஜூன் 8 - 33,229