திங்கள், 8 ஜூன், 2020

தெலங்கானாவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: சந்திரசேகர ராவ்

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவின் பல மாநிலங்களில், 10ம் வகுப்பு உள்ளிட்ட பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சிக்கில் நீடிக்கிறது. இது குறித்து ஆலோசனை நடத்த, தெலங்கானா மாநில அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

 

அதில், 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு நடத்தாமல், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். பள்ளிக்கூடத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் கிரேடு பிரிக்கப்படும், எனவும் தெலங்கானா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: