தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழாய்வில் மேலும் இரண்டு தொன்மையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏரல் அருகே உள்ள சிவகளையில் மாநில தொல்லியல் துறை சார்பில் மே 25ஆம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணியாளர்கள் 40 பேர், ஆய்வு மாணவர்கள் 10 பேர் என மொத்தம் 50 பேர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5ஆம் தேதி அகழாய்வில், 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு அடுக்குகளில் காணப்படும் இந்த முதுமக்கள் தாழிகளை, எந்தவித சேதமும் இன்றி, குழியிலிருந்து வெளியே எடுக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், உடைந்த நிலையிலும் ஐந்து முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சிவகளையில் நடைபெறும் இந்த அகழாய்வு மூலம், 2.000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நாகரீகம் வெளிப்படும் என வரலாற்று ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.