செவ்வாய், 16 ஜூன், 2020

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு

பாராட்ட மனமில்லாவிட்டால் பரவாயில்லை விமர்சிக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அரசியல் செய்ய இது காலம் இல்லை எனவும், நோய் பாதிப்பில் வெற்றி என்ன, தோல்வி என்ன என கேள்வியெழுப்பி உள்ளார். சரியான நேரத்தில், சரியான முடிவுகளை தமிழக முதலமைச்சர் எடுத்து வருவதாக கூறிய அமைச்சர், அரசு திறம்பட செயலாற்றி வருவதாகவும், எதிர்மறையான கருத்துகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுப்பதாகவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அப்போது, கொரோனா தொற்றால் இறந்தவர்களின் கணக்கை மறைத்து, வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசு நடந்துகொள்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.  தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியதாகவும் அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

Related Posts: