நேரத்தில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தெற்கு மற்றும் வங்கக்கடலின் மையப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு இன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 (திங்கட்கிழமை) மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் , அதனை அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் ( நிவர் ) வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 25-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகலில் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கக் கூடும்” என்று தெரிவித்தது
இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்,
நாளை (நவம்பர் 23) நாகப்பட்டினம் , தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில்வ ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்,
24, 25 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினம் , தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெர்மபலூர் மற்றும் காரைக்கால், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் ,திருவண்ணாமலை புதுச்சேரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் .
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை யொட்டிய பகுதிகளுக்கும், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கும் வரும் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.