திங்கள், 9 நவம்பர், 2020

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்!

Image

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகிறது.

 

தமிழ்நாட்டில் கடந்த 2017 முதல் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. இதற்காக Speed Institute, Etoos India, E-Box என்று வெவ்வேறு நிறுவனங்களின் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகளை E-Box நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை நடத்தவுள்ளது. இதில் சேருவதற்காக இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான  இலவச நீட் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.