மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீடுகளின்படி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 23.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அதையடுத்து, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (2வது காலாண்டு) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம் சுருங்கியது. 2019-20ம் ஆண்டின் இதே காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய நிகழ்வின் மூலம், இந்திய பொருளாதாரம் வரலாற்றில் முதல் முறையாக (தொழில்நுட்பரீதியாக) மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது. பொருளாதாரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு அல்லது அதற்கு மேல் எதிர்மறையாக இருக்கும்போது, அது மந்தநிலை என்று அழைக்கப்படுகிறது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் (முதல் காலாண்டு) மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதம் சுருங்கியது. இது இந்தியப் பொருளாதாரத்தின் வரலாற்றில் மிக மோசமான சுருக்கமாகும். இது கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் காரணமாக நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கத்தால் ஏற்பட்டது. இருப்பினும், நாடு படிப்படியாக பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேறியது. அரசாங்கம் படிப்படியாக பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ், பொருளாதாரம் மீளும் வேகத்தில் எதிர்பார்த்ததை விட வலுவான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஆனால் தேவையின் நிலைத்தன்மை குறித்து எச்சரிக்கிறது என்று வியாழக்கிமை கூறினார். சுவாரஸ்யமாக, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீத சுருக்கத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இருப்பினும், 2020-21 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பொருளாதாரம் கடந்த 6 மாதங்களின் சுருக்கத்திலிருந்து வெளியேறி சாதகமான வளர்ச்சிக்கு திரும்பும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அரசு தரவுகளின்படி, செப்டம்பர் காலாண்டில் 7.0 சதவீதமாக சுருங்கியதில் இருந்து நிலையான விலைகளில் (2011-12) அடிப்படை விலைகள் மொத்த மதிப்பு (ஜி.பி.ஏ) சேர்க்கப்பட்டது. தற்போதைய விலையான அடிப்படை விலையில் ஜி.வி.ஏ 2020-21 காலாண்டில் 4.2 சதவீதம் சரிந்தது.
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக தரவுகளின்படி, உற்பத்தித் துறை செப்டம்பர் காலாண்டில் 0.6 சதவீதம் உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் 39.3 சதவிகிதம் சரிந்தது. அதேபோல், மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகள் பிரிவு 2வது காலாண்டில் 4.4 சதவீதம் அதிகரித்து, முந்தைய காலாண்டில் 7 சதவீத வீழ்ச்சியிலிருந்து சரிந்தது. வேளாண்மை, காடு வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் முந்தைய காலாண்டில் இருந்து மாறாமல், 2வது காலாண்டில் 3.4 சதவீத நிலையான வேகத்தில் வளர்ந்தது.
மற்ற தொழில்களான வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகளில் சுருக்கம் 2வது காலாண்டில் 15.6 சதவீதமாக இருந்தது. இது முதல் காலாண்டில் 47.0 சதவீத சுருக்கத்திலிருந்து மிகவும் நன்றாக உள்ளது. கட்டுமானத் துறையும் 8.6 சதவீத சுருக்கத்தைக் காட்டியது. இது முதல் காலாண்டில் 50.3 சதவீத சுருக்கத்திலிருந்து இப்போது நன்றாக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கருத்து
2வது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு வெளியானதைத் தொடர்ந்து, தற்போதைய பொருளாதார நிலை கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே வி சுப்பிரமணியன் தெரிவித்தார். மூன்றாம் காலாண்டில் உணவு பணவீக்கம் மென்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். மேலும், இது உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று அவர் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டில் நேர்மறையான இடத்தை அடையா முடியுமா என்று கணிப்பது கடினம்” என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.