What are UGCs new guidelines for reopening universities and colleges in India : கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பே மார்ச் மாத நடுவில் தேசம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. வியாழக்கிழமை பல்கலைக்கழக மானிய குழு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் திறப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
எப்போது பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகிறது?
உள்ளூர் நிலவரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை படிப்படியாக திறக்க ஒப்புதல் வழங்கியது. உண்மையான நேரம் மற்றும் திறக்கும் முறை மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுபடும். பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்ட நிலையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.
உதாரணமாக பஞ்சாம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தீபாவளிக்கு பிறகு நவம்பர் 16ம் தேதியில் இருந்து மாணவர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. மேற்கு வங்க கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் டிசம்பர் மாதத்தில் திறக்க தயாராக இருக்கும் படி கோரியுள்ளார். மத்திய அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள் என்றால், ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் தலைவர் வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
யார் முதலில் பல்கலைக்கழகம் செல்வது?
மத்திய அரசு பள்ளி திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறிய நிலையில் யு.ஜி..சி. தன்னுடைய விதிமுறைகளில் மிகவும் கவனமாக உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் படிக்கும் முதுகலை மாணவர்கள், கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பவர்களை பல்கலைக்கழகம் உடனே அழைக்க வேண்டும் என்று உயர்கல்வி கட்டுப்பாட்டாளர்கள் விரும்புகின்றனர். இருப்பினும் ஒரே நேரத்தில் கல்லூரிகளுக்க்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமாக இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்கள் விரும்பினால் பேராசிரியர்களிடம் முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட அளவு மாணவர்கள் தங்களின் துறைகளுக்கு சென்று ஆலோசனை மேற்கொள்ளலாம்.
வருகைப் பதிவேடு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
பள்ளி மாணவர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயம் இல்லை என்பதில் மத்திய அரசு தெளிவான நிலைப்பாட்டை எட்டியுள்ளது. ஆனால் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களில் அது தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை. “சில மாணவர்கள் பள்ளிக்கு வந்து வகுப்புகளை தொடர விரும்பாமல், ஆன்லைனில் மட்டுமே படிக்க விரும்பலாம். கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் படிக்க பாட புத்தகங்கள் மற்றும் இதர மூலங்களை வழங்க வேண்டும்” என்று மட்டும் கூறியுள்ளது.
“சர்வதேச பயண தடை மற்றும் விசா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டு படிப்பினை தொடர முடியாத வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு திட்டத்தை கல்வி நிறுவனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்காக ஆன்லைனில் கற்பித்தல் – கற்றல் ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க வேண்டும்” என்று யு.ஜி.சி. அறிவித்துள்ளது.
கொரோனா நோய்தொற்று காலத்தில் கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கும்?
வழக்கமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக வளாகங்களில் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் ஆசிரியர், மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்தல் தவிர்த்து வாரத்தில் 6 நாட்களுக்கு பல்கலைக்கழகங்கள் நீண்ட நேரம் திறந்திருக்கும் போது மாணவர்கள் ஒரு பிரிவினராக தங்க வைக்கப்படுவதையும், சமூக இடைவெளி பின்பற்றப்படுதலையும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயமாகும். ஒரு வகுப்பு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்களின் நுழைவு கடுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைநிகழ்வுகள் மற்றும் ஆலோசனைக்கூட்டங்கள் தவிர்க்கப்படும். ஆனாலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் இடத்தில் விளையாட்டு மற்றும் கூடுதல் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும். யு.ஜி.சி. கல்லூரி விடுதிகளை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படியே இருந்தாலும் ஒரு அறையை பங்கிட்டு கொள்தல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால், அனைத்து ஹாஸ்டலர்களுக்கும் அனுமதி கிடையாது. இது தொடர்பாக, யார் முன்பே கல்லூரிக்கு வரலாம் என்ற முன்னுரிமையை நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தங்களின் ஊர்களில் இருந்து திரும்பி வரும் மாணவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன் கட்டாயம். கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் மாணவர்களுக்கு விடுதியில் தங்க அனுமதி கிடையாது. கல்லூரியில் தங்கி இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்தைகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வளாகத்திற்குள்ளே அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதையும் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
வளாகத்தின் உள்ளே தங்கியிருக்கும் ஆசிரியர்கள் அல்லது மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர் உடனே தனிமைப்படுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்று ஏற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான திட்டத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். வளாகத்திற்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இருக்கும் இடத்தை சுற்றிய மனித தொடர்புகள் மற்றும் இயக்கம் ஆகியவற்றை முற்றிலுமாக தடுக்க வேண்டும். எந்த வகுப்பையும் எடுக்காதது, விடுதிகளில் இருந்து வெளியேறாமல் இருப்பது மற்றும் மெஸ்ஸில் இருந்து உணவை எடுத்து வராமல் இருப்பது ஆகியவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.